ஜல்லிக்கட்டு, காளை வண்டி பந்தயம் மற்றும் விலங்குகளை பயன்படுத்தும் பிற நிகழ்ச்சிகளுக்கு பீட்டா இந்தியா எதிர்ப்பாக இருப்பது ஏன்?

“ஜல்லிக்கட்டின் வாயிலாக காளைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றன”. இயற்கையிலேயே இரை விலங்குகளான இவைகள் வேண்டுமென்றே அச்சுறுத்தும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றன.  இதனால் தன்னை வேட்டையாட வருகிறார்கள் என்ற எண்ணத்தில் அவைகள் ஓடும்படியான சூழ் நிலைக்குத் தள்ளப்படுகின்றன.

இன் அனிமல்ஸ் இன் ட்ரான்ஸ்லேஷன்: யூசிங்க் த மிஸ்டிரிஸ் ஆப் ஆட்டிஸம் டூ டீக்கோடு அனிமல் பிகேவியர்,டாக்டர்.டெம்பில் கிராண்டின், புகழ்பெற்ற விலங்கு நல நிபுணர் மற்றும் கொலோராடொ மாநில பல்கலைக்கழகத்தில் விலங்கு அறிவியல் பேராசிரியர் மற்றும் கேத்ரின் ஜான்சன் எழுதியாவது,” உணர்வு ரீதியாக விலங்குகளை பயமுறுத்த நீங்கள் செய்யும் விஷயம் சிறியதாக இருந்தாலும் அது மோசமானதாகும்.  பயம், விலங்குகளை மிகவும் தீங்கு விளைவிக்கின்றது, வேதனையை விட பயம் கொடுமையானது என நான் நினைக்கிறேன். இதைச் சொல்லும்போது எனக்கு எப்போதுமே ஆச்சரியாமாக இருக்கும். ஆழ்ந்த வலி மற்றும் தீவிர பயம் ஆகியவற்றிக்கு இடையில் நீங்கள் பெரும்பாலான மக்களுக்கு ஒரு தேர்வைக் கொடுத்தால், அவர்கல் பயத்தையே தேர்ந்தெடுப்பார்கள்”.

ஜல்லிக்கட்டில் பயன்படுத்தப்படும் காளைகள் வலி மற்றும் பயம் இரண்டையுமே உணருகின்றன.  பங்கேற்கும் ஆண்களின் கும்பலால் அவைகள் மிகவும் பயந்து போகின்றன, அவர்கள் காளைகள் மீது தழுவுகிறார்கள், விழுகிறார்கள்.  இதனால் தப்பித்து செல்வதற்கான அவநம்பிக்கை முயற்சியில் அவைகள் தடைகள்,  நெரிசல் மற்றும் குன்றிலிருந்தும் குதித்து விடுகின்றன. இதன் விளைவாக எலும்பு முறிந்து விடுகின்றன அல்லது இறந்து விடுகின்றன.

ஜல்லிக்கட்டின் போது காளைகளின் வால்கள் முறுக்கப்படுவதும், கடிக்கப்படுவதும், கத்தி, அரிவாள், குச்சி மற்றும் கூர்மையான ஆயுதங்களைக் கொண்டும் குத்துக்கின்றனர். மைதானத்திற்கு கொண்டு வருவதற்காக அவைகளின் மூக்குக் கயிற்றினைப் பிடித்து இழுப்பது, அடிப்பது மற்றும் அதன் மேல் ஏறுவது அவைகளுக்கு மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது.  இதனை பீட்டாவின் ஆவணப்படுத்தப்பட்டுள்ள தகவலில் காணலாம்.

மேலும் பீட்டா இந்தியா, பந்தயத்தின் போது மனிதர்கள் காயப்படுவதால் ஓடுவதை ஆவணப்படுத்தியுள்ளது.  பங்கேற்பாளர்கள் காளைகளை அடிப்பதற்கு வெறும் கைகள் முதல் ஆணிகள்  நிறைந்த குச்சிகள் வரை பயன்படுத்துகிறார்கள் மேலும் அவற்றின் வால்களின் ஒவ்வொரு இனைப்புகளிலும் முறிவுகள் ஏற்படுகின்றனர்.  யாராவது நம் கைவிரல்களை இனைப்பு இனைப்பாக முறித்தால் எத்தனை வலியை உணருகிறோமோ, அவ்வாறே காளைகளும் உணருகின்றன.

காளை சண்டையில், ஏதாவது ஒரு காளை பயந்து தப்பியோடும் போது அல்லது கொல்லப்படும்போதே விளையாட்டு முடிவுக்கு வருகிறது.

விலங்குகள் மீதான கொடுமையைத் தடுக்கும் (தமிழ் நாடு) சட்டம் 2017, நிறைவேற்றப்பட்டதிலிருந்து, இந்த நிகழ்வுகளின் போது குறைந்தது 43 மனிதர்கள் (11 பார்வையாளர்கல் உட்பட) 14 காளைகள் மற்றும் ஒரு பசு கொல்லப்பட்டுள்ளன.  உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாகக் கூட இருக்கலாம்.  பத்திரிக்கைகள் பெரும்பாலும் ஜல்லிக்கட்டு நிகழ்வில் ஏற்படும் காயங்களை காண்பிப்பதில்லை, முக்கியமாக காளைகள் அனுபவிக்கும் காயங்கள் மற்றும் இறப்புகளை எப்போதுமே காண்பிப்பதில்லை.

பீட்டா இந்தியா ஏன் ஜல்லிக்கட்டை மட்டுமே குறி வைத்துள்ளது?

பீட்டா இந்தியாவின் குறிக்கோள் என்னவென்றால், விலங்குகள் வேறு எந்த வகையிலும் பரிசோதனை செய்யப்படவோ, சாப்பிடவோ, அணியவோ, பொழுதுப்போக்குக்காகவோ அல்லது கொடுமைக்களுக்கோ உள்ளாக்கக் கூடாது.  வீகன் உணவு முதல் செல்லப் பிராணிகளின்  கருத்தடை வரை பலவிதமான சிக்கல்களில் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.  மேலும் தகவல்களுக்கு தயவுசெய்து பார்க்கவும் PETAIndia.com

நீங்கள் பார்த்தீர்களானால், நாங்கள் ஜல்லிக்கட்டு, காளை பந்தயம் போன்றவைகளையும் சேர்த்து விலங்குகளைக் கொடுமைக்கு உள்ளாக்குவதையே நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறோம்.  மேலும் விலங்குகளுக்கான பாதுக்காப்பு சட்டத்திற்காக பாடுப்படுகின்றோம்.  ஜூலை 7, 2011, தி கஸட் ஆப் இந்தியா-வில் மத்திய அரசின் அறிவிப்பு காளைகளை காட்சிப் பொருளாக பயன்படுத்துவது சட்டவிரோதமாக அறிவித்தது.

மரியாதைக்குரிய உச்ச நீதிமன்றம் அதன் தீர்ப்பில் 7, மே 2014-ல் காளைகளைக் காட்சிப் பொருளாக பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது.  மேலும் நீதிமன்றம் இந்த நிகழ்வுகளில் நடைபெறும் கொடுமை இயல்பற்றது, ஏனென்றால் காளைகள் உடற்கூரியல் ரீதியாக பந்தயத்திற்கு பொருந்தாதது எனவும் தீர்ப்பளித்துள்ளது.  காளைகளை பந்தயத்திற்கு கட்டாயப்படுத்துவது அவைகளுக்கு தேவையில்லாத வலி மற்றும் கஷ்டங்களை கொடுக்கிறது.  எனவே இது சட்டத்தினால் அங்கீகரிக்கப் படவில்லை. ஆனால் விலங்குகளுக்கான கொடுமையை தடுக்கும் இச்சட்டம், 1960 மீறப்பட்டுள்ளது.  இதன் பொருள் என்னவென்றால் ஜல்லிக்கட்டு மற்றும் காளை பந்தயங்களில் மூலமாக காளைகளுக்கு தேவையற்ற வலி மற்றும் துன்பத்தினை ஏற்படுத்துவது சுமார் 60 ஆண்டுகளாக சட்டவிரோதமாகும்.

7 மே, 2014- உச்ச நீதிமன்ற தீர்ப்பின் பத்தி 77-ல் பின்வருமாறு கூறியுள்ளது:

“ஆகவே ஜல்லிக்கட்டு மற்றும் காளை வண்டி பந்தயம் போன்ற நிகழ்வுகளைப் பொருத்தவரை AWBI (இந்திய விலங்குகள் நல வாரியம்)-இன் நிலைப்பாடு சரியானது என்று  நாங்கள் கருதுகிறோம்.

பி.சி.ஏ சட்டத்தின் 3,11 (1)(அ) மற்றும் 11 (1) (மீ) (ii) பிரிவுகளின் படி மத்திய அரசு 11-07-2011 தேதியிட்ட அறிவிப்பை நாங்கள் ஆதரிக்கிறோம்.  இதன் விளைவாக, ஜல்லிக்கட்டு   நிகழ்வுகள் தமிழ்நாடு, மாகராஷ்டிரா மாநிலத்தில் அல்லது நாட்டின் பிற இடங்களில் காளை வண்டி பந்தயத்திற்கு காளைகளை பயன்படுத்தக் கூடாது”.

பி.சி.ஏ சட்டம், 1960-ன் 3 மற்றும் 11(1) (அ) பிரிவுகளின் படி, எந்தவொரு நபரும் “ எந்தவொரு மிருகத்தையும் அடிப்பது, குத்துவது, உதைப்பது, அதன் மேல் சவாரி செய்வது, சுமைகளை சுமக்க வைப்பது, சித்திரவதைகள் அல்லது வேறு எந்த விலங்கையும் சட்ட விரோதமாக தேவையற்ற வலி அல்லது துன்பம் ஏற்படுத்துவது அல்லது அதற்கு காரணமாக இருந்தால், அல்லது உரிமையாளர்கள் அதற்கு அனுமதியளித்தால், அது சட்டவிரோதமாகும்.  பி.சி.ஏ சட்டம், 1960-ன் பிரிவு 11(1) (மீ) (ii)- படி எந்தவொரு நபரும்  “எந்தவொரு விலங்கையும் கட்டுப்படுத்தவோ அல்லது கட்டுப்படுத்த காரணமாகவோ இருந்தால், ஒரு பொருளாகவோ, எந்தவொரு விலங்குக்கு இரையாகவோ அது (ஒரு புலி அல்லது சரணாலயத்தில் பிற ஒரு விலங்கை தூணில் கட்டுவது உட்பட) சட்டவிரோதமாகிறது.

“சண்டை ஒரு விலங்கு அல்லது மனிதனுடன் இருக்கலாம்”, TNRJ (ஜல்லிக்கட்டு தமிழ் நாடு ஒழுங்குமுறை) சட்டத்தின் 5-வது பிரிவு உத்தரவின் படி காளை மற்றும் காளையை அடக்குபவர்களுக்கிடையே ஒரு சண்டையை உருவாக்குகிறது, அதாவது காளையை அடக்குபவர்கள் காளையுடன் சண்டையிட்டு அதனைக் கட்டுப்படுத்த வேண்டும்.  பி.சி.ஏ சட்டத்தின் பிரிவு 11(1) (மீ) (ii) –இன் கீழ் இத்தகைய சண்டை தடை செய்யப்பட்டுள்ளது” என உச்ச நீதிமன்றம் தெளிவுப்படுத்தியுள்ளது.

ஜல்லிக்கட்டு தமிழக ஒழுங்குமுறை (TNRJ) சட்டத்தை உச்ச நீதிமன்றம் நிறுத்தியது, ஏனென்னில் இது, பிரிவு 3, பிரிவு 11(1) (அ), 11(1) (மீ)(ii) மற்றும் பிரிவு 22- வுடன் முரணனானது மற்றும்  நேரடியாக மோதுகிறது.  எனவே அரசியலமைப்பின் 51-ஏ (ஜி) மற்றும் 51-ஏ & (எச்) கட்டுரைகளுடன் பி.சி.ஏ சட்டத்தினை படிக்கும் போது, அவை சட்டத்திற்கு பொருந்தவில்லை”.

ஜல்லிக்கட்டு இந்தியாவின் கலாச்சாரம் அல்லது பாரம்பரியத்தின் ஒரு பகுதி அல்லது மத முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால் அதை அனுமதிக்க வேண்டும் என்ற வாதம் பற்றி என்ன கூறுகிறீர்கள்?

எண்ணற்ற பீட்டா இந்தியாவின் தமிழ் ஆதரவாளர்கள் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவர்கள், மேலும் தீமைகளை தமிழ் “கலாச்சாரம்” என்றும் அழைப்பதன் மூலம் காளைகளுக்கு தீங்கு விளைவிப்பதை நியாயப்படுத்துபவர்களை வருத்தப்பட செய்கிறது.  இந்தியாவின் கலாச்சாரம் கருணை, கொடுமையல்ல.  இந்திய அரசியலைமப்பின் பிரிவு 51 ஏ (ஜி) –இன் படி “காடுகள், ஏரிகள், ஆறுகள் மற்றும் வனவிலங்குகள் உள்ளிட்ட இயற்கை சூழலைப் பாதுக்காக்கவும், மேம்படுத்தவும் மற்றும் உயிரினங்கள் மீது இரக்கம் காட்டவும் ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமையாகும்”.

7 மே 2014, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் பத்தி 42 பின்வருமாறு கூறுகிறது: TNRJ சட்டத்தின் பொருள் மற்றும் காரணங்கள் அறிக்கை பண்டைய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் குறிக்கிறது.  மேலும் அதில் எந்த மத முக்கியத்துவமும் கூறப்படவில்லை.  பண்டைய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் கூட ஜல்லிக்கட்டு அல்லது காளை வண்டி பந்தயங்கள் நடத்துவதை ஆதரிக்கவில்லை. ஆனால் அவை தற்போது நடத்தப்படுகின்றன.  காளையின் நலன் மற்றும் நல் வாழ்வே தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியமாகும்.  காளைகளுக்கு எந்த வலியையும் துன்பத்தையும் ஏற்படுத்துவதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.  மறுபுறம், தமிழ் பாரம்பரிய கலாச்சார முறைப்படி காளையை வணங்கினர் மற்றும் காளையை சிவனின் வாகனமாக கருதினார்கள்.  ஏறு தழுவுதல் என்பது மனித துணிச்சலை காட்டி காளையை வெல்லாமல் தழுவுவதேயாகும்”.

“ஜல்லிக்கட்டு மற்றும் காளை வண்டி பந்தயம் தற்போது நடைமுறையில் உள்ளது.  இது ஒரு போதும் தமிழ்நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரமாக இருந்ததில்லை” என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அதே தீர்ப்பின் பத்தி 43 பின்வருமாறு கூறுகிறது:

பி.சி.ஏ சட்டம் எங்கள் பார்வையில், நலனுக்கான சட்டமாகும், பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் என்ற பெயரில் மீறப்படும் நிகழ்வுகளுக்கு துணையாக இல்லை.  ஜல்லிக்கட்டு மற்றும் காளை வண்டி பந்தயங்கள், அவை நடத்தப்படும் விதம், தமிழ் பாரம்பரியம் அல்லது கலாச்சாரத்தை ஆதரிக்கவில்லை.  சில காலமாக இது நடைமுறையில் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள், எங்கள் பார்வையில் இது தேவையற்ற வலி அல்லது விலங்குகளுக்கு துன்பம் ஏற்படுவதைத் தடுப்பதற்காக கடமைகள் மற்றும் விலங்குகளை கவனிக்கும் பொறுப்பில் உள்ள நபர்கல் பி.சி.ஏ சட்டம் போன்றவைகளுக்கு வழிவகுக்க வேண்டும்.

எவ்வாறாயினும், தொடர்ச்சியான துஷ்பிரயோகத்திற்கு வரலாறு ஒருபோதும் ஒரு நல்ல சாக்கு அல்ல.  மேலும் சுயமான சிந்தனையை கொண்டிருப்பதற்கும் இரக்கத்தை வெளிப்படுத்துவதற்கும், தன்னாட்சியான முடிவுகளை எடுப்பதற்கான காரணத்தை பயன்படுத்துவதற்கும் நமக்கு திறன் உள்ளது.  உதாரணமாக, இறைச்சி உண்ணும் கலாச்சாரத்தில் வளர்ந்த பலர் முட்டை மற்றும் பால் உணவுகள் உற்பத்தியில் விலங்குகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர் என்பதை அறிந்த பிறகு வீகன் உணவைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.  நம் வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது என்பதை நாம் முடிவு செய்தாலே, மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் விடுமுறை நாட்களை கொண்டாடலாம்.  சமூகம் மற்றும் கடந்த காலத்தால் கொண்டுவரப்பட்ட செயல்களை நாம் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை.  குறிப்பாக பாரம்பரிய விதிமுறைகளுக்கு இணங்குவது, மற்றொரு உயிரை துன்பப்படுத்துவது, சுவாசிப்பது மற்றும் தனி மனித சிந்தனை.

மேலும் இந்துக்கள் பொதுவாக சிவனைக் கவுரவிக்கும் விதமாக நந்தியை வழிபடுகிறார்கள்.  சில துஷ்டர்கள் சிவன் கோவிலுக்குள் நுழைந்து நந்தியின் சிலையை இழிவுப்படுத்தினால், மக்கள் அதற்கு ஆதரவாக நிற்க மாட்டார்கள்.  நிஜ வாழ்க்கையில் மட்டும் ஏன் சிவ பெருமானின் காளைகளை துஷ்பிரயோகம் படுத்துவதை ஆதரிக்க வேண்டும்?

ஜல்லிக்கட்டிற்கு காளைகள் பயன்படுத்த படாவிட்டால், அவை இறைச்சி வெட்டும் கூடங்களுக்கு விற்கப்படும் என்று சிலர் கூறுகிறார்களே.

ஜனவரி 12, 2016 அன்று வெளியான “ ஜல்லிக்கட்டில், பாரம்பரியம் மற்றும் விலங்குகளுக்கான கொடுமை பற்றிய கேள்விகள்” என்ற தலைப்பில், தி இந்தியன் எக்ஸ் பிரஸ், காளை வண்டி பந்தயம் அல்லது ஜல்லிக்கட்டிற்கான டிக்கெட்டுக்கள் விற்கப்படுகின்றன” என்று தெரிவித்துள்ளது.  மேலும் பின்வருமாறு கூறுகிறது:

“ஜல்லிக்கட்டு நிகழ்வுகள் எந்தவொரு பெரிய பண மதிப்பு நன்மைகளையும் வழங்குவதில்லை மற்றும் பரிசு பெரும்பாலும் ஒரு வேட்டி, துண்டு, வெற்றிலை, வாழைப்பழங்கள் மற்றும் டோக்கன் பணம் அரிதாக ரூ.101-க்கு மேல் ஒரு வெள்ளித்தட்டில் வைத்து கொடுக்கப்படும்.  ஆனால் கடந்த சில ஆண்டுகளில் நடந்த சில நிகழ்வுகளின் பரிசு பட்டியலில் மிக்சர்-கிரைண்டர்கள், குளிர்சாதன பெட்டிகள் மற்றும் தளவாட சாதனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன”.

இது உண்மையான கலாச்சாரம் அல்ல. 14, ஜனவரி 2017 அன்று தி இந்து பத்திரிக்கையின் கட்டுரையில், “ஜல்லிக்கட்டில் 43 உயிர்கள் இறந்துள்ளன: AWBI “ என தலைப்பிட்டுள்ளது.  ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்காக டிக்கெட்டுக்கள் விற்கப்படுவதைக் காணலாம்.  மேலும் ஜல்லிக்கட்டு வெற்றியாளருக்கான பரிசுகளில் கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.  ஆனால் கலாச்சார ரீதியாக, விவசாயிக்கு எந்தவொரு பண நன்மையும் இல்லை; டிக்கெட்டுக்கள் விற்கபடுவதும் இல்லை.  எனவே ஜல்லிக்கட்டின் தடை விவசாயிகளை பண ரீதியாக பாதிப்பதில்லை.  மேலும் இறைச்சிக் கூடங்களுக்கு விற்கப்படும் காளைகளுக்கு அதிக தொகையும் கிடைப்பதில்லை.

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள மாணிக்கம்பட்டியில் வசிப்பவர் கூறியதாக டைம்ஸ் ஆப் இந்தியா பின்வருமாறு மேற்கோளிடுகிறது, “ எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர், ஆனால் நான் என் காளைக் கருப்பசாமியை தன் அதிகம்  நேசிக்கிறேன்.  நான் என் குழந்தைகளை தவிர்த்திருக்கிறேன், ஆனால் என் காளையை அல்ல.  பொதுவாக ஜல்லிக்கட்டு காளைகள் கடவுளுக்காக உறுதியளிக்கபடுகின்றனர்.  நாங்கள் அதனை புனிதமாக கருதுகிறோம்”. காளைகளை புனிதமாகக் கருதுவதால் நிச்சயமாக அவற்றை இறைச்சிக் கூடங்களுக்கு விற்பது பற்றி எண்ணிக் கூட பார்க்க மாட்டார்கள்.

காளைகள் எதிர்க்கொள்ளும் ஒரே துன்பம் இறைச்சிக் கூடங்கள் மட்டுமல்ல.  பல வகையான கொடுமைகள் உள்ளன, அவை அனைத்தும் தவறானவை. காளைகள் வாழ்க்கை இறைச்சிக் கூடங்களில் முடியவில்லை என்றாலும், அவைகள் பயிற்சியின் போது அல்லது ஜல்லிக்கட்டின் போது இனி இது பயன்படாது என்ற நிலை வரும்போது இது அடிக்கடி நிகழ்கிறது.

மேலும் ஜல்லிக்கட்டு நிகழ்வின் போது ஏராளமான காளைகளும் இறந்துவிடுகின்றனர்.

ஜல்லிக்கட்டை தடை செய்தால் பூர்வீக கால் நடை இனம் அழிந்துவிடும் என்று சிலர் கூறுகிறார்கள்.

கொடுமை என்பது பாதுக்காப்பு அல்ல.  புலிகளை காயமடைய செய்வதன் மூலம் அல்லது கொல்வதன் மூலம் யாராவது பாதுக்காக பரிந்துரைத்தால், மக்கள் அந்த நபரை பைத்தியம் என்று அழைப்பார்கள்.

இந்தியாவின் கால் நடை இனங்கள் பல ஆண்டுகளாக மாறி வருகின்றன.  ஜல்லிக்கட்டு அனுமதிக்கப்பட்ட பல ஆண்டுகளில் கூட இது நடந்துள்ளது, எனவே ஜல்லிக்கட்டு தடையினால் மட்டுமே இது நடக்கிறது என்று கூறுவது ஏற்க முடியாதது.  கால் நடை இனங்கள் பெரும்பாலும் மனிதர்களின் “தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்தப்படுகின்றனர், அதாவது அதிகரித்த பால் உற்பத்தி போன்றவைகள்.  இனத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஒரு இனத்தின் அழிவைக் குறிக்காது.  வளர்ப்பு கால் நடைகள், அழியும் ஆபத்தில் இருக்கும் உயிரினங்கள் பட்டியலில் இல்லை.  இருந்தாலும் கூட ஆர்வம் உள்ள இடங்களில், கால் நடை வளர்ப்புத் துறைகள் பல்வேறு அறிவியல் வழிமுறைகளில் மூலம் இனங்களை பராமரிக்கின்றனர்.

இந்த “பூர்விக இனம்” என்ற வார்த்தை உருவாக்குபவர்களால் தான் ஜல்லிக்கட்டிற்கான “வீரியமான காளைகள் வளர்க்கபடுகின்றது என கூறப்படுகிறது.  ஜல்லிக்கட்டில் வென்ற காளைகளுக்கு பசுக்களின் இனப்பெருக்கத்திற்கு அதிக தேவை உள்ளது.  இருந்தாலும் ஜல்லிக்கட்டின் தடை இந்த  நோக்கத்திற்காக பயன்படுத்துவதை தடுக்காது.  சிறு விவசாயிகளால் வீரியமான காளைகளை வைத்திருக்க முடியாது என்று கூறப்படுகிறது. எனவே ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பொதுவான கோயில் காளை உள்ளது அது பொதுவாக பசுக்களை கருவூட்டப் பயன்படுத்தப்படுகிறது.  இருப்பினும், இது தொடரலாம்.  மேலும், ஜல்லிக்கட்டு நிகழ்வை விட எந்த காளை ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை ஒரு கால்  நடை மருத்துவரே கிராம மக்களுக்கு தெரிவிக்க முடியும்.

மேலும், சில காளைகள் ஜல்லிக்கட்டுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன, மற்றவை போக்குவரத்து மற்றும் விவசாய விலங்குகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. இது ஜல்லிக்கட்டு இல்லாமல் கூட எளிதில் தொடரக்கூடிய ஒரு நடைமுறையாகும்.

உண்மையாக காளைகளை மற்றும் பிற விலங்குகளை கொடுமைக்கு உட்படுத்தாத வாழ்க்கை  நடைமுறை வழிகளை இச்சமூகம் கொண்டு வர முடியும்.

பீட்டா இந்தியா வெளிநாட்டு கால்நடைகளை வளர்க்க விரும்புகிறது என்ற வதந்திகளை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அது உண்மையா?

இது உண்மையாக இருந்தால், என்னவொரு சிக்கலான, வினோதமான, தகுதியற்ற திட்டம்!

பீட்டா இந்தியா நிறுவனம் ஒரு விலங்கு உரிமை அமைப்பு ஆகும்.  மேலும் எங்களின் குறிக்கோள், “விலங்குகளை சாப்பிட அவை  நம்முடையது அல்ல” என்பதாகும்.  நாங்கள் ஒரு சைவ வாழ்க்கை முறையை ஆதரிக்கிறோம், அதாவது வெளி நாட்டு கால் நடைகளை இறைச்சி அல்லது பால் உற்பத்திக்காக ஊக்குவிப்பதில் எங்களுக்கு எந்தவித ஆர்வமும் இல்லை. உண்மையில், இறைச்சி மற்றும் பால் தொழில்களின் உள்ளார்ந்த கொடுமைகளை பற்றியே நாங்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்கிறோம்.

பீட்டா இந்தியா ஏன் இறைச்கிக் கூடங்களை தடை செய்யவில்லை?

தடையை நாங்கள் விரும்புகிறோம்!  பீட்டா இந்தியாவிற்கு அந்த அதிகாரம் இல்லை, மேலும் நீதிமன்றங்கள் இருக்கும் சட்டங்களை மட்டுமே ஆதரிக்கவும் முடியும்.

விலங்குகளை கொண்டு செல்வதிலும் உணவுக்காக கொல்லும் போதும் சட்ட விரோத கொடுமை இயல்பானது என பதிலளித்த மாநில அரசாங்கத்திற்கு எதிராக பீட்டா இந்தியா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.  இதன் விளைவாக உரிமம் பெறாத இறைச்சிக் கூடங்களை தகர்க்க, சட்ட அமலாக்கக் குழுக்களை அமைக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டங்கள் அமல்படுத்தப்பட்டாலும் கூட, அவை பெரும்பாலான விலங்குகளை கொல்ல அனுமதிக்கின்றன.  அதனால் தன், தோல் அணிவதை மறுப்பது உட்பட, சைவ உணவு உண்பதன் மூலம் விலங்குகள் கொல்லப்படுவதை  நிறுத்த உதவுமாறு பொது மக்களை ஊக்குவிக்கிறோம்.   சைவ உணமை சாப்பிடுவதற்கான மாற்றத்தில் மக்களுக்கு உதவ  நாங்கள் ஒரு இலவச சைவ உணவு தொடக்க கிட்- யும் வழங்குகிறோம்.  இதை PETAIndia.com –இல்  ஆர்டர் செய்யலாம்.

ஈத்-அல்-ஆதா போன்ற விலங்கு தியாகத்தை தடை செய்ய பீட்டா இந்தியா ஏன் அழைக்கவில்லை?

நாங்கள் செய்கிறோம்.  எல்லா மதங்களும் இரக்கத்திற்கு தான் அழைப்பு விடுக்கின்றன. எந்த மதமும் அதன் வழிபாட்டாளர்கள் மாமிசம் சாப்பிட வேண்டுமென்று கூறவில்லை.

விலங்குகளுக்கான கொடுமை தடுப்பு (இறைச்சி கூடங்கள்) விதிகள் 2001, ஏற்கனவே “அங்கீகரிக்கப்படாத அல்லது உரிமம் பெற்ற இறைச்சிக் கூடங்களை தவிர பிற இடங்களில் விலங்குகளை அறுக்கக் கூடாது” என்று கூறியிருக்கிறது. இதன் பொருள், உரிமம் பெற்ற இறைச்சிக் கூடங்களுக்கு வெளியே விலங்குகள் கொல்லப்பட்டால் தகவ்ல் அறிந்த எவரும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம்.

நிச்சயமாக, உரிமம் பெற்ற இறைச்சிக் கூடங்களும் கொடூரமானவைதான்.  ஈத்-அல்-ஆதாவிற்கு முன்னதாக தியோனாரில் நடைபெற்ற விலங்குகளுக்கான பயங்கரமான கொடுமைப் பற்றி பீட்டா இந்தியாவில் படியுங்கள்.  அதை இங்கே நிறுத்த நீங்கள் என்ன உதவி செய்ய முடியும் என்று சிந்தியுங்கள்.

ஸ்பெயினில் காளை சண்டை பற்றி பீட்டா இந்தியா ஏன் எதுவும் செய்யவில்லை?

இந்தியாவில், ஜல்லிக்கட்டு போன்ற அதே சட்டங்கள் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் கீழ் காளை சண்டை தடை செய்யப்படுள்ளது.

பீட்டா இந்தியாவின் முக்கியமான கவனத்திற்குரியது தெற்காசியா, ஆனால் எங்களுக்கு இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா துணை நிறுவனங்கள் உட்பட பல குழுக்கள் உள்ள்ன.  அவை காளை சண்டை பிரச்சனைகளில் செயல்படுகின்றன, அவற்றின் முயற்சியை நாங்கள் ஆதரிக்கிறோம்.

இந்த நடைமுறை உலகம் முழுவதும் இன்னும் ஒரு சில் நாடுகளில் மட்டுமே உள்ளன.  காளை சண்டை பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.

பீட்டா அமெரிக்கா பற்றி நீங்கள் கூறுவது என்ன?

பீட்டா இந்தியா மற்றும் பீட்டா அமெரிக்கா ஆகியவை முற்றிலும் தனித்தனி நிறுவனங்கள்.  பீட்டா இந்தியா ஒரு இந்திய குழு.

PETA.org மூலம் PETA US-இன் வேலையைப் பற்றி அறிய நாங்கள் உங்களை ஊக்குவிக்கின்றோம்.